விளையாடிய ஐந்து போட்டிகளிலும் ஐந்தில் வெற்றி பெற்று 10 புள்ளிகள் உடன் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.
2023 ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தோல்வியே சந்திக்காத அணி என்ற பெருமையை தற்போது இந்தியா படைத்திருக்கிறது.
21வது லீக் ஆட்டத்தில் இந்தியாவும் நியூசிலாந்து அணியும் பல பரிட்சை நடத்தியது. இதில் இரண்டு அணிகளுமே விளையாடிய நான்கு ஆட்டங்களிலும் வெற்றிப் பெற்று இருந்தது.
மேலும் நியூசிலாந்து அணி உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிராக மெர்சலான ரெக்கார்டை வைத்திருந்தது. இதனால் நியூசிலாந்தை இந்தியா வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் இருந்தது.
இந்த நிலையில் நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 273 ரன்கள் எடுக்க இந்திய அணி இந்த இலக்கை 48 ஓவரில் ஆறு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றிப் பெற்றது.
இதன் மூலம் தற்போது புள்ளி பட்டியலில் இந்திய அணி முதல் இடம் பிடித்திருக்கிறது. விளையாடிய ஐந்து போட்டிகளிலும் ஐந்தில் வெற்றி பெற்று 10 புள்ளிகள் உடன் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.
தற்போது நியூசிலாந்து அணி 5 போட்டிகளில் விளையாடி நான்கில் வெற்றிப் பெற்று ஒன்றில் தோல்வி அடைந்து 8 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
நியூசிலாந்துடைய ரன் ரெட் 1.48 என்ற அளவில் இருக்கிறது. தென்னாப்பிரிக்கா அணி நான்குப் போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றிப் பெற்று 6 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது .
ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றி இரண்டு தோல்வி என நான்கு புள்ளிகளுடன் மைனஸ் 0.19 என்ற ரன் ரேட்டில் நான்காவது இடத்தில் இருக்கிறது.
பாகிஸ்தான அணி நான்கு போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றி இரண்டு தோல்வி என நான்கு புள்ளிகள் உடன் மைனஸ் 0.45 என்ற அளவில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.