வங்கதேசத்தில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்,
உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் டாக்காவின் வடகிழக்கில் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்நாட்டின் பைரப் நகரில் பயணிகள் ரயிலுடன், சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதி விபத்து நடந்துள்ளது. இதனால் இரண்டு பயணிகள் பெட்டிகள் தடம் புரண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் 15 உடல்களை மீட்க்கப்பட்டுள்ளது, மேலும் இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கவிழ்ந்த பெட்டிகளுக்கு அடியில் சில உடல்கள் சிக்கியிருப்பதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் சிக்கி சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் காயடமடைந்துள்ளனர்.
மாலை 4:00 மணியளவில் நடந்த இந்த விபத்தானது, ஒரு ரயில் மற்றொரு ரயில் வரும் பாதையில் நுழைந்ததால் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.