2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான சுரங்கம் மற்றும் குவாரித் துறையின் கனிம உற்பத்தி 12.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்திய சுரங்க பணியகத்தின் தரவுகளின்படி, 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான சுரங்கம் மற்றும் குவாரித் துறையின் கனிம உற்பத்தி குறியீடு 111.9 ஆக உள்ளது. இது 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது 12.3 சதவீதம் அதிகமாகும்.
அதே நேரத்தில், 2023-24-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்திற்கான ஒட்டுமொத்த வளர்ச்சி முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 8.3 சதவீதமாகும்.
2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், நிலக்கரி உற்பத்தி 684 இலட்சம் டன்னாகவும், பழுப்பு நிலக்கரி உற்பத்தி 28 இலட்சம் டன்னாகவும், பெட்ரோலியம் உற்பத்தி 25 இலட்சம் டன்னாகவும், பாக்சைட் உற்பத்தி 1,428 ஆயிரம் டன்னாகவும், குரோமைட் உற்பத்தி 148 ஆயிரம் டன்னாகவும், தாமிரம் உற்பத்தி 10 ஆயிரம் டன்னாகவும் உள்ளது.
மேலும், தங்கம் உற்பத்தி 113 கிலோ கிராமாகவும், இரும்புத்தாது உற்பத்தி 181 இலட்சம் டன்னாகவும், ஈயம் உற்பத்தி 30 ஆயிரம் டன்னாகவும், மாங்கனீசு உற்பத்தி 233 ஆயிரம் டன்னாகவும், துத்தநாகம் உற்பத்தி 132 ஆயிரம் டன்னாகவும், சுண்ணாம்புக்கல் உற்பத்தி 365 இலட்சம் டன்னாகவும், பாஸ்போரைட் உற்பத்தி107 ஆயிரம் டன்னாகவும், மாக்னசைட் உற்பத்தி10 ஆயிரம் டன்னாகவும் உள்ளது.
2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தைவிட, 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கனிமங்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. தங்கம் (46.8%), பாஸ்போரைட் (40.7%), மாங்கனீசு தாது (36.9%), தாமிரக் கனிமங்கள் (18.9%), நிலக்கரி (17.8%), இரும்புத் தாது (14.9%), சுண்ணாம்புக்கல் (13.8%), இயற்கை எரிவாயு (பயன்படுத்தப்பட்டது) (9.9%), மாக்னசைட் (4.5%), பெட்ரோலியம் (கச்சா) (2.1%), குரோமைட் (1.4%) அதிகரித்துள்ளது.