1948-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24 தேதி அன்று ஐக்கிய நாடுகள் தினம் கொண்டாடப்படுகிறது.
உலக அமைதி மற்றும் சமத்துவத்தை நோக்கிச் செயல்பட்டு வரும் ஒரு உலகளாவிய நிறுவனம் ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பு ஆகும்.
ஐக்கிய நாடுகள் சபை அதிகாரப்பூர்வமாக 24 அக்டோபர், 1945 அன்று நடைமுறைக்கு வந்தது. “ஐக்கிய நாடுகள்” என்ற பெயர் அமெரிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்டால் உருவாக்கப்பட்டது. 1971 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அந்த நாளை பொது விடுமுறை தினமாக உறுப்பு நாடுகளால் அனுசரிக்க பரிந்துரைக்கப்பட்டது.
இந்த சாசனம் 1945 ஜூன் 26 அன்று 50 நாடுகளின் பிரதிநிதிகளால் கையெழுத்திடப்பட்டது. மாநாட்டில் பிரதிநிதித்துவம் செய்யப்படாத போலந்து, பின்னர் கையெழுத்திட்டு உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 51 ஆக மாறியது. தற்போது 193 உறுப்பு நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் இருக்கின்றன.
இந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை தன்னுடைய 78 வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. ஐ.நா. தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளின் போது நியூயார்க்கில் உள்ள தலைமையகத்தில் அமைப்பின் பொதுச்சபை மண்டபத்தில், ஒரு இசை நிகழ்ச்சி நடத்தப்படும்.
மேலும் இந்த ஆண்டின் கருப்பொருள் ” அனைவருக்கும் சமத்துவம், சுதந்திரம் மற்றும் நீதி” என்பதாகும். அதாவது உலக மக்கள் அனைவரும் சமத்துவம், சுதந்திரம் மற்றும் நீதி சரியாக வழங்கப்படும் என்பதே இதன் பொருளாக உள்ளது.