பிரான்சின் ஆதரவை வெளிப்படுத்தவே இஸ்ரேல் வந்துள்ளதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7-ம் தேதி திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்தினர். மேலும் பலரை அவர்கள் பிணைக் கைதிகளாக பிடித்து சென்றனர். இதனையடுத்து ஹமாஸ் இயக்கத்தினர் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் இன்று டெல் அவிவ் சென்றார். அங்கு இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாகை அவர் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நடந்ததை ஒருபோதும் மறக்க முடியாது என்றும் “எங்கள் ஒற்றுமையை ஆதரவை வெளிப்படுத்த இங்கு வந்துள்ளதாக தெரிவித்தார். உங்கள் மக்கள், உங்கள் தேசம், உங்கள் உரிமைகளுக்கான ஆதரவை” காட்டுவதற்காக தான் இஸ்ரேலுக்கு விஜயம் செய்ததாகவும் அவர் கூறினார்.
ஒன்பது பிரெஞ்சு குடிமக்கள் ஹமாஸால் பணயக் கைதிகளாகப் பிடித்து செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பணயக்கைதிகளை விடுவிப்பதே “முதல் நோக்கம்” என்று மேக்ரான் கூறினார்.