தமிழ் திரையுலகில் தனக்கு என ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித். ஒரு சில நடிகர்களைப் போல் தலைக்கனம் இல்லாமலும், விளம்பரம் வெளிச்சம் இல்லாமலும் வாழ்ந்து வருபவர் நடிகர் அஜித். இவர், காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, மங்காத்தா, பில்லா 2 என பல்வேறு படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.
தற்போது, இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி படத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதற்காக நடிகர் அஜித் அங்குச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் சாலை விரிவாக்கம் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனால் கிழக்கு கடற்கரைச் சாலையை ஒட்டியுள்ள தனியாருக்குச் சொந்தமான இடத்தில் சாலை விரிவாக்கத்திற்காக நீதிமன்ற உத்தரவின் பேரில் நெடுஞ்சாலைத் துறையினர் பணிகள் செய்து வருகின்றனர் எனக் கூறி
இதில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக நடிகர் அஜீத்குமார் வீட்டின் முகப்பு வாயிலில் உள்ள மதில் சுவர் இடிக்கப்பட்டது.
நடிகர் அஜித் வீட்டின் மதில் சுவர் இடிக்கும் தகவல் தீயாகப் பரவியதால், அவரது ரசிகர்கள் அஜித் வீட்டு முன்பு குவிந்தனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ரசிகர்களிடம் உண்மையை எடுத்துச் சொல்லி அனுப்பிவைத்தனர்.
மேலும், சிலருக்கு மதில் சுவர் இடிக்கப்பட்டதற்கான இழப்பீடும், சிலருக்கு மீண்டும் கட்டித்தரப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டு உள்ளதாம்.