இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக உலகப் பொருளாதாரம் மற்றும் அதன் வளர்ச்சிக்கு கடுமையான, அடியாக இருக்கும் என உலக வங்கி தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சவுதி அரேபியாவில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் உலக வங்கி தலைவர் அஜய் பங்கா பங்கேற்று உரையாற்றினார். அப்போது, தற்போதைய உலகளாவிய சூழ்நிலையை விவரிக்கும் போது, உலகம் மிகவும் ஆபத்தான கட்டத்தில்” உள்ளது என்றார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் உலகப் பொருளாதாரம் மற்றும் அதன் வளர்ச்சிக்கு கடுமையான அடியாக இருக்கும் என்றும் தெரிவித்தார். காசாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போரால் நிச்சயமற்ற தன்மை நிலவுவதாகவும், அதனைத் தொடர்ந்து பொருளாதார வீழ்ச்சி ஏற்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
உலக அரசியலில் நாம் பார்க்கும் போர்கள் மற்றும் காசா மீது இஸ்ரேலின் தாக்குதல் உள்ளிட்டவற்றை ஒப்பிட்டு பார்க்கும் போது உலக பொருளாதாரம் அபாய கட்டத்தை அடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்கா பொருளாதாரத்தை சுட்டிக்காட்டிய அவர், அந்நாட்டு பொருளாதாரம் நிழலில் பதுங்கியுள்ளதாகவும் அஜய் பங்கா குறிப்பிட்டார்.