அல்-அசிசியா எஃகு தொழிற்சாலை ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு வழங்கப்பட்ட தண்டனை செயலாக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதுதொடர்பான அவென்ஃபீல்ட் பிராபர்டீஸ் என்ற வழக்கில் 2018ஆம் ஆண்டு 11ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து பஞ்சாப் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் அதே ஆண்டில் அல் அசிசியா என்ற எஃகு தொழிற்சாலை வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதனிடையே 2019ஆம் சிகிச்சை பெற வெளிநாடு செல்ல வேண்டும் என நவாஸ் ஷெரீப் அனுமதி கோரினார். இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக லண்டன் சென்றார்.
சுமார் 4 ஆண்டுகளுக்கு பின்னர் அக்டோபர் 21ஆம் தேதி நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் திரும்பினார். இந்நிலையில் அல்-அசிசியா எஃகு தொழிற்சாலை ஊழல் வழக்கில் அவருக்கான தண்டனை செயலாக்கத்தை நிறுத்தி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை தகவல் தொழில் தொடர்பு துறை அமைச்சர் அமீர் மிர் உறுதிப்படுத்தியுள்ளார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CPC) பிரிவு 401 இன் கீழ் அரசியலமைப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி பஞ்சாய் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறினார். எனினும் இதுதொடர்பான இறுதி முடிவை நீதிமன்றம் தான் எடுக்கும் என்றும் அவர் கூறினார். இதேபோல் தோஷ்ஹாஹனா வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது