உடல்நலக்குறைவால் காலமான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் பிஷன்சிங் பேடி இறுதிச்சடங்கில் கபில்தேவ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிஷன்சிங் பேடி உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது வயது 77. கடந்த 1967 முதல் 1979-ம் ஆண்டு வரை சர்வதேச போட்டிகளில் விளையாடிய அவர் 67 டெஸ்டில் 266 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். சுமர் 14 தடவை விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர், அந்த காலகட்டத்தில் இந்திய அணி பெற்ற வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
இந்நிலையில் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பேடி நேற்று காலமானார். அவரது மறைவிக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் டெல்லி லோதி மயானத்தில் பிஷன் சிங் பேடியின் இறுதிச்சடங்கு நடைபெற்றது.இதில் கபில்தேவ், சேவாக், மதன்லால், கீர்த்தி ஆசாத், ஆஷிஷ் நெகரா, முரளி கார்த்திக், அஜய் ஜடேஜா உள்ளிட்டோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.