தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ளனர், 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் தற்போதைய, நீர்மட்டம் 49.38 அடியாக உள்ளது.
தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழை பெய்தது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது.
கடந்த 10-ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 30 அடியாக இருந்த நிலையில், கடந்த சில வாரங்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக, அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து, நேற்று காலை 48.86 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 49.38 அடியாக அணையின் நீர்மட்டம் உயர்ந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று வினாடிக்கு 4 ஆயிரத்து 138 கனஅடியாக வந்து கொண்டு இருந்த நிலையில், இன்று 4 ஆயிரத்து 334 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட, அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைவாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.