பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற முத்துராஜாவிற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
சீனாவில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் சகோதரர் முத்துராஜா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு, தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சீனாவில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் சகோதரர் திரு. முத்துராஜா அவர்கள் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு, @BJP4Tamilnadu சார்பாக மனமார்ந்த… pic.twitter.com/JyGXlRNCZZ
— K.Annamalai (@annamalai_k) October 24, 2023
சகோதரர் முத்துராஜா உள்ளிட்ட வீரர்கள், நம் அனைவருக்கும் மிகப்பெரிய உத்வேகமாக விளங்குகிறார்கள். அவர் மேலும் பல சாதனைகள் படைத்து, நம் நாட்டையும், நம் அனைவரையும் பெருமைப்படுத்த வேண்டும் என்று, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.