ஊழல், பயங்கரவாதம் ஆகிய தீய சக்திகளை ஒழிக்க இராமரின் சித்தாதங்கள் நமக்கு உதவும் என தசரா விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
டில்லி செங்கோட்டையில் நவராத்திரியையொட்டி நடைபெற்ற தசரா விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய குடியரசுத் தலைவர், ஊழல், பயங்கரவாதம் இன்றும் நாட்டிற்கு மிகப்பெரும் சவாலாக உள்ளது. இவற்றை எதிர்க்கொண்டு வருகிறோம். இத்தீய சக்திகளை ஒழித்துக்கட்ட ராமரின் சித்தாந்தங்கள் நமக்கு உதவும் என தெரிவித்தார்.