கடந்த ஜூலை, 28-ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து என் மண் என் மக்கள் யாத்திரையை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கினார். ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களில் முதல்கட்ட யாத்திரை மேற்கொண்டார்.
2-ம் கட்ட யாத்திரை திட்டமிட்டபடி தொடங்கி, வெற்றிகரமாக நிறைவு பெற்ற நிலையில், தற்போது 3-வது கட்ட யாத்திரை நடைபெறுகிறது. அண்ணாமலையின் யாத்திரை தமிழகத்தில் பொது மக்களிடையே மிகப்பெரும் எழுச்சியை உருவாக்கியுள்ளது. திரும்பிய திசை எல்லாம் பொது மக்கள் மேளம், தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மூன்றாம், கட்ட யாத்திரையான, என் மண் என் மக்கள்’ 46 -வது நாள் யாத்திரை இன்று நடைபெறுகிறது. மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் மாலை 4 மணிக்குத் துவங்குகிறது. இந்த பகுதியில் மாலை 6.30 மணி வரை யாத்திரை நடைபெறுகிறது. மாலையில் சிவகிரியில் இருந்து பெருந்துறை நோக்கி பிரமாண்ட யாத்திரை செல்கிறது. இந்த யாத்திரை மாலை 7.10 மணிக்குப் பெருந்துறை சென்றடைகிறது.
அண்ணாமலை பாத யாத்திரையையொட்டி, பாஜகவினர் உற்சாக வெள்ளத்தில் உள்ளனர். யாத்திரை செல்லும் வழி எங்கும் பாஜக கொடிகளும், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் படங்கள் கொண்ட பாதகைகளை வைத்துள்ளனர். பாஜக அரசின் 9 ஆண்டு சாதனைப்பட்டியல் புத்தங்களை மக்களுக்கு வழங்குகின்றனர்.
மேலும், தங்கள் தொகுதிக்கு வரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை வரவேற்கும் வகையில், பாரம்பரிய முறைப்படி பெண்கள் ஆரத்தி தட்டுகளுன் காத்திருந்து வரவேற்பு கொடுக்க தயார் நிலையில் உள்ளனர்.
பாஜகவின் இந்த எழுச்சியால், தமிழகத்தில் ஆளும் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் நடுக்கத்தில் உள்ளன.