பாரா ஆசியா விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற பவீனா படேல்லை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாளான இன்று காலை முதலே இந்தியா தங்கம், வெள்ளி, வெண்கலம் என்று பதக்கங்களை குவித்து வருகிறது.
இதில் இன்று பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் சிங்கிள்ஸ் கிளாஸ் – 4 போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணியின் சார்பாக பவீனா படேல் பங்கேற்றார்.
A true inspiration for budding athletes! Congratulations to @BhavinaOfficial on winning the Bronze Medal in Table Tennis Women's Singles – Class 4 event. Her extraordinary talent and steadfast commitment have brought immense pride to our nation. pic.twitter.com/NiVe06HMEB
— Narendra Modi (@narendramodi) October 25, 2023
இந்தப் போட்டியில் இவருடன் சீன அணியின் சியாடன் கு விளையாடினார். இதில் கடுமையான போராட்டத்திற்கு பிறகு இந்திய அணியின் வீராங்கனை பவீனா படேல் 11-7 என்ற கணக்கில் வெண்கல பதக்கத்தை வென்றார்.
பதக்கம் வென்ற வீராங்கனைக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ” பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் சிங்கிள்ஸ் கிளாஸ் – 4 பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற பவீனா படேல்லுக்கு வாழ்த்துக்கள். அவரது திறமை மற்றும் அர்ப்பணிப்பை நம் தேசத்தை பெருமை படுத்துகிறது” என்று பாராட்டியுள்ளார்.