பாரா ஆசியா விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற ஷ்ரேயன்ஷ் திரிவேதியை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாளான இன்று காலை முதலே இந்தியா தங்கம், வெள்ளி, வெண்கலம் என்று பதக்கங்களை குவித்து வருகிறது.
What a Brilliant Bronze for Shreyansh Trivedi in the T-37 200-meter Asian Para Games event.
Shreyansh’s speed and unwavering determination have delighted the nation. Truly remarkable accomplishment. pic.twitter.com/iS1Sld0v15
— Narendra Modi (@narendramodi) October 25, 2023
இதில் இன்று ஆண்களுக்கான 200 மீ T37 போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணியின் சார்பாக ஷ்ரேயன்ஷ் திரிவேதி கலந்துகொண்டார்.
இதில் ஷ்ரேயன்ஷ் திரிவேதி பந்தய இலக்கை 25.26 வினாடிகளில் கடந்து வெண்கல பதக்கத்தை வென்றார்.
பதக்கம் வென்ற வீரருக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ” பாரா ஆசிய விளையாட்டின் ஆண்களுக்கான 200 மீ T37 போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்ற ஷ்ரேயன்ஷ் திரிவேதிக்கு வாழ்த்துக்கள். இவரின் அசைக்க முடியாத வேகமும், உறுதியும் நம் தேசத்தை மகிழ்வித்துள்ளது ” என்று பாராட்டியுள்ளார்.