2 நாள் பயணமாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை தமிழகம் வருகிறார்.
டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாளை தமிழகம் வருகிறார். அவருக்கு விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மாநில அமைச்சர்கள் வரவேற்பு அளிக்கின்றனர்.
இதனைத்தொடர்ந்து சென்னையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக அவர் கலந்துகொள்கிறார்.
குடியரசுத்தலைவரின் தமிழக வருகையை முன்னிட்டு விமான நிலையம் மற்றும் விழா நடைபெறும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.