நல்லிணக்கத்துடன் வாழும்போது, சமூகம் மற்றும் நாட்டின் கட்டமைப்பு வலுவடைகிறது! - குடியரசுத்தலைவர் .
Mar 15, 2026, 09:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நல்லிணக்கத்துடன் வாழும்போது, சமூகம் மற்றும் நாட்டின் கட்டமைப்பு வலுவடைகிறது! – குடியரசுத்தலைவர் .

Murugesan M by Murugesan M
Oct 25, 2023, 07:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சமூகத்தில் அமைதியையும்  நல்லிணக்கத்தையும்  மேம்படுத்த, சகிப்புத்தன்மை, ஒருவருக்கொருவர் மரியாதை மற்றும் நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தைப்  புரிந்துகொள்வது அவசியம் என குடியரசுத்தலைவர்  திரௌபதி முர்மு  தெரிவித்துள்ளார்

குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற சர்வசமயக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர்  திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய குடியரசுத்தலைவர், நமது வாழ்க்கையில் மதத்திற்கு முக்கிய இடமுண்டு. மத நம்பிக்கைகளும்  நடைமுறைகளும், பாதகமான சூழ்நிலைகளில் நமக்கு நிவாரணம், நம்பிக்கை மற்றும் வலிமையை வழங்குகின்றன.

பிரார்த்தனையும் தியானமும் மனிதர்கள் மன அமைதியையும் நிலையான உணர்ச்சியையும் அனுபவிக்க உதவுகின்றன. ஆனால் அமைதி, அன்பு, தூய்மை, உண்மை போன்ற அடிப்படை ஆன்மீக மதிப்புகள் நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகின்றன. இந்த விழுமியங்கள் இல்லாத சமய  நடைமுறைகள் நமக்குப் பயனளிக்காது. சமூகத்தில் அமைதியையும்  நல்லிணக்கத்தையும்  மேம்படுத்த, சகிப்புத்தன்மை, ஒருவருக்கொருவர் மரியாதை மற்றும் நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தைப்  புரிந்துகொள்வது அவசியம் என்றார்.

ஒவ்வொரு மனித ஆன்மாவும் அன்புக்கும் மரியாதைக்கும் உரியது என்று கூறினார். தன்னை அங்கீகரித்தல், முக்கிய ஆன்மீக குணங்களுக்கு ஏற்ப ஒரு வாழ்க்கையை வாழ்வது, கடவுளுடன் ஆன்மீக உறவைக் கொண்டிருப்பது என்பவை சமூக நல்லிணக்கம் மற்றும் உணர்ச்சி ஒருங்கிணைப்புக்கு  இயற்கையான வழியாகும்.

அன்பும் இரக்கமும் இல்லாமல் மனிதகுலம் வாழ முடியாது என்று குடியரசுத்தலைவர் கூறினார். வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் நல்லிணக்கத்துடன் வாழும்போது, சமூகம் மற்றும் நாட்டின் கட்டமைப்பு வலுவடைகிறது. இந்த பலம் நாட்டின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தி முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்கிறது. 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளதால், இந்த இலக்கை அடைய அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் என்றும்  கூறினார்.

Tags: President Droupadi Murmu
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றிய பிரதமர் மோடி: மத்திய அமைச்சர் புகழாரம்!

Next Post

சென்னிமலை அருள்மிகு முருகன் திருக்கோவில்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies