திராவிடர் கழகத் தலைவர் வீரமணி வேந்தராக உள்ள பல்கலைக் கழகத்தின் பெயர் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம். இந்த கல்லூரி தஞ்சை வல்லத்தில் அமைந்துள்ளது.
கடந்த 23-ம் தேதி நாடு முழுவதும் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், ஆயுத பூஜையையொட்டி, அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான பேருந்தில் வாழை மரம் கட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடவுள் நம்பிக்கை உள்ள இந்துக்கள் மட்டுமே, ஆயுத பூஜையை கொண்டாடி, தங்கள் வாகனங்களுக்கு வாழை மரம் கட்டி, சந்தனம், குங்குமம் பூசி வழிபடுவது வழக்கம்.
இந்த நிலையில், தஞ்சையில் உள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பிலும் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடவுள் மறுப்பு பிரசாரத்தில் மிகத் தீவிரமாக உள்ள திராவிடர் கழகமும், அக்கட்சியின் தலைவருமான கி.வீரமணி வேந்தராக உள்ள கல்லூரி இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு பக்கம் கடவுள் மறுப்பு செய்துவிட்டு மறுபுறம் சத்தமே இல்லாமல், இந்துக்கள் மட்டுமே கொண்டாடும் ஆயுத பூஜையை கொண்டாடி உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.