பொது மக்கள் மற்றும் அதிக போக்குவரத்து உள்ள சென்னை மாநகராட்சி பகுதிகளில் மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக ஓவ்வோரு தெருக்களிலும் 10 முதல் 20 -க்கும் மேற்பட்ட அடங்கா மாடுகள் சுற்றித் திரிகிறது. குறிப்பாக, கோயம்பேடு, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் என முக்கிய இடங்களில் அடங்கா மாடுகள் சுற்றித்திரிகின்றன.
சென்னை போன்ற பெரு நகரங்களில் மாடு வளர்க்கும் அளவு சூழல் உள்ளதா, இட வசதி உள்ளதா, அதுவும் ஒருவரே 10 முதல் 20 மாடுகள் வரை சிறு தொழிலாகவே வளர்த்து வருகின்றனர்.
இதனால், அடிக்கடி போக்கு நெருக்கடி ஏற்படுகிறது. காலை, மாலையில் பள்ளி, அலுவலகம் செல்வோர் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சமீபத்தில் கூட, பள்ளி குழந்தை ஒருவரை மாடு முட்டி, புரட்டி எடுத்தது. அந்த சிறுமி உயிர் பிழைத்தது அபூர்வமானது. தற்போது திருவல்லிக்கேணியில் முதியவரை மாடு முட்டி அவர் உயிர்பிழைத்துள்ளார். இப்படி நடப்பது இது முதல் முறை அல்ல. ஆயிரமாவது முறை.
காலை, மாலை என மாடுகளைத் தேடி வந்து பால் கறந்து செல்லும் மாட்டின் உரிமையாளர்கள், மாடுகளுக்கு உணவு வழங்குவதில்லை. மாறாக, மாடுகள் உணவு இன்றி, தெருவில் கீழே கிடக்கும் கழிவுகள், பேப்பர், பிளாஸ்டிக் போன்ற கழிவுகளைத் தின்று வாழ்ந்து வருகிறது.
இது தொடர்பாக யாராவது மாட்டின் உரிமையாளரிடம் கேள்வி கேட்டால், அவர்களை ஆபாசமாக பேசுவது, தாக்குவது தொடர்கிறது. மாநகராட்சி வசம் புகார் தெரிவித்தால், அவர்கள் லஞ்சம் வாங்கிக் கொண்டு எஸ்கேப் ஆகிவிடுகின்றனர்.
மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மட்டும் நேர்மையாளராக இருந்தால் சென்னை மீண்டுவிடாது. மற்ற அதிகாரிகளும் கொஞ்சமாவது சிந்தித்து மக்கள் மீது அக்கறை செலுத்த வேண்டும். எப்படிப் பார்த்தாலும் கடைசியில் பாதிக்கப்படுவது அப்பாவி பொது மக்களே.
சட்டம் என்பது ஏட்டளவில் இருக்கும் வரை இது போன்ற தவறுகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.