ஹமாஸ் இயக்கத்தினரை அழிக்க விரைவில் தரை வழித்தாக்குதல் தொடங்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஐ.நா.வின் போர் நிறுத்த அழைப்பை நிராகரித்த இஸ்ரேல் ஹமாசை ஒழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என சூளுரைத்துள்ளது. அதன்படி காசா மீதான குண்டு மழையை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் நாட்டு மக்களிடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையாற்றினார். அப்போது, நாங்கள் ஒரு தரைவழி தாக்குதலுக்கு தயாராகி வருகிறோம். எப்போது, எப்படி, எத்தனை நாள் என்று குறிப்பிடமாட்டேன் என்றார்.
ஹமாஸ் தீவிரவாதிகளை ஒழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என்றும் அவர் கூறினார். இது இரண்டு நோக்கங்களுக்காக நடத்தப்படுகிறது. ஒன்று பணயக்கைதிகளை மீட்பது மற்றும் ஹமாஸின் முகாம்களை அழிப்பது என கூறியுள்ளார். தரைவழி ஊடுருவலுக்கான நேரம் குறித்து ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹமாஸ் தாக்குதலில் 1,400 பேர் உயிரிழந்த வலியை மறக்க முடியாதது என்றும் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ஹமாஸ் ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் குறித்து உலகத்தலைவர்கள் தற்போது புரிந்துகொண்டதாகவும், அதனைத்தொடர்ந்து அவர்கள் இஸ்ரேலுக்கு உதவி செய்து வருவதாகவும் கூறினார். ஹமாஸ் தீவிரவாதிகளை அழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என நெதன்யாகு கூறினார்.