தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகங்கை பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 30 – ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழா வரும் 28 -ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதற்கான யாகசாலை பூஜை மற்றும் லட்சார்ச்சனையுடன் ஆன்மிக விழா ஏற்பாடுகள் களை கட்டியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பசும்பொன்னில் நடைபெற உள்ள விழாவில், பாஜக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்த உள்ளனர்.
இந்த நிலையில், தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகங்கை , திருப்புவனம் , மானாமதுரை , இளையான்குடி , காளையார்கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி , கல்லூரிகளுக்கு வரும் 30 – ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் பிறப்பித்துள்ளார்.