வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ராஜ்குமார் ராவைத் தேசிய அடையாளமாகத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
தேர்தலின்போது வாக்காளர்கள் பங்கேற்பை அதிகரிக்கும் வகையில், இந்தியத் தேர்தல் ஆணையம் பிரபல நடிகர் ராஜ்குமார் ராவுடன் கைகோர்த்துள்ளது. குறிப்பாக இளைஞர்களிடையே அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த ராஜ்குமார் ராவைத் தேசிய அடையாளமாக ஆணையம் அங்கீகரித்துள்ளது.
புதுடெல்லியில் உள்ள ரங் பவனில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் ராஜ்குமார் ராவ்விடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இது குறித்துப் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், ராஜஸ்தான், தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் விவரங்களைப் புதுப்பிக்கத் தேர்தல் ஆணையம் நாளை முதல் சிறப்பு இயக்கத்தைத் தொடங்க உள்ளது.
மிசோரம் மாநிலத்தில் தேர்தல் நடைமுறையில் இளைஞர்களை ஈர்க்க கல்வி அமைச்சகத்துடன் கைகோர்க்க ஆணையம் திட்டமிட்டுள்ளது என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய நடிகர் ராஜ்குமார் ராவ், தன்னை தேசிய அடையாளமாக அங்கீகரித்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்தார். மேலும், இளம் வாக்காளர்கள் வாக்களிக்க அதிக அளவில் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தியத் தேர்தல் ஆணையம் புகழ்பெற்ற பிரமுகர்களுடன் கைகோர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.