தமிழக ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்படுகிறது என தமிழ்நாடு ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
ஆளுநர் மாளிகை முன்பு நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக ராஜ் பவன் சார்பில் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது என்றும் நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்படுகிறது என தமிழ்நாடு ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆளுநர் மாளிகை தனது எக்ஸ் பதிவில்,
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) October 26, 2023
ராஜ்பவனின் தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை. தன்னிலையாக பதிவு செய்யப்பட்ட புகார், தாக்குதலை சாதாரண நாசகார செயலாக நீர்த்துப்போகச் செய்து விட்டது.
அவசரகதியில் கைது மேற்கொள்ளப்பட்டு மாஜிஸ்திரேட்டை நள்ளிரவில் எழுப்பி குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டு விட்டதால் பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தக்கூடிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது.
நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்படுகிறது.