திருமலையில் அன்னதானம் வழங்குவதற்கான நன்கொடையை ரூ.33 லட்சத்தில் இருந்து ரூ. 38 லட்சமாக திருப்பதி தேவஸ்தானம் உயர்த்தியுள்ளது.
திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னப் பிரசாத பிரிவு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கி வருகிறது.
சுமார் 70 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. இதற்காக ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னபிரசாதம் அறக்கட்டளைக்கு பணமாகவும் பொருளாகவும் கணிசமான நன்கொடை பக்தர்கள் அளித்து வருகின்றனர்.
ஒரு நாளுக்கான காலை உணவு சேவைக்கு நன்கொடையாளருக்கு 8 லட்சம் ரூபாய் செலவாகும், மதிய உணவு மற்றும் இரவு உணவு ஆகிய இரண்டு சேவைகளுக்கும் தலா 15 லட்ச ரூபாய் செலவாகும்.
இந்த திட்டத்திற்காக ஒரு நாளுக்கு 33 லட்சம் ரூபாயை பக்தர்கள் நன்கொடை வழங்கி வந்தனர்.இது தற்போது ரூ.38 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அன்னப்பிரசாதம் திட்டத்திற்கு நாள்தோறும், 14 முதல் 16.5 டன் அரிசி மற்றும் 6.5 முதல் 7.5 டன் காய்கறிகள் தேவைப்படுவதாக திருப்பதி தேவாஸ்தானம் கூறப்பட்டுள்ளது.