சந்திர கிரகணம் வரும் 29-ம் தேதி நடைபெறுவதையொட்டி, உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் நடை சுமார் 8 மணி சாத்தப்பட உள்ளது.
திருக்கோவில் அனுஷ்டான வாக்கிய பஞ்சாங்கம் மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளது. அதன்படி, சந்திர கிரகணம் 29-ம் தேதி இந்திய நேரப்படி நள்ளிரவு 1 மணி 5 நிமிடத்துக்குத் தொடங்குகிறது. அதிகாலை 2 மணி 236 நிமிடத்துக்கு நிறைவு பெறுகிறது.
இதனையொட்டி, முந்தைய நாளான சனிக்கிழமை 28-ம் தேதி இரவு 7.05 முதல் 29-ம் தேதி அதிகாலை 3.15 மணி வரை எட்டு மணி நேரம் திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் நடை சாத்தப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சந்திர கிரணம் நிறைவு பெற்ற பின்னர், திருக்கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். இதனால், 29-ம் தேதி அதிகாலை சுப்ரபாத சேவை ஏகாந்தமாக நடைபெறும்.
சந்திர கிரகணத்தால் 28-ம் தேதி சகஸ்ர தீப அலங்கார சேவை மற்றும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசன சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.