வான்பாதுகாப்பு சாதனங்களை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என விமானப்படை அதிகாரிகளை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.
டெல்லியில், இந்திய விமானப்படை உயர் அதிகாரிகளின் 2 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டின் ஒட்டுமொத்த போர் திறன்களை மேம்படுத்த விமானப்படை, கடற்படை மற்றும் இராணுவத்தின் கூட்டுத் திட்டமிடல் மற்றும் செயல்பாடுகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
உலகளாவிய பாதுகாப்பு சூழ்நிலையில் இருந்து புதிய சவால்கள் எழுவதாகவும் அவற்றைச் சமாளிக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார், வேகமாக மாறிவரும் உலக அரசியல் சூழ்நிலையை ஆராய்ந்து அதை இந்திய சூழலில் மதிப்பிடுமாறு தளபதிகளை அவர் கேட்டுக்கொண்டார்.
இந்தியாவின் வான்பாதுகாப்பு சாதனங்களை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். என்றும், டிரோன்கள் பயன்பாட்டையும் அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
எத்தகைய செயல்பாடுகளுக்கும் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்றும், முப்படைகளும் கூட்டாக திட்டமிட்டு, கூட்டாக செயல்பாடுகளை நிறைவேற்ற வேண்டும் அவர் கேட்டுக்கொண்டார்.
,இமாசலபிரதேசம், சிக்கிம் போன்ற மாநிலங்களில் பேரிடர் சம்பவங்களின்போது விமானப்படை சிறப்பான நிவாரணப்பணிகளை மேற்கொண்டதற்கு ராஜ்நாத்சிங் பாராட்டு தெரிவித்தார்.