பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணிக்கு மேலும் ஒரு தங்க பதக்கம் கிடைத்துள்ளது.
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்களை குவித்து வருகிறது.
இதில் இன்று பெண்களுக்கான தனிநபர் வில்வித்தை பிரிவு போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணியின் சார்பாக ஷீத்தல் தேவி பங்கேற்றார்.
இந்தப் போட்டியில் இந்திய வீராங்கனையுடன் சிங்கப்பூரை சேர்ந்த ஆலிம் நூர் பங்குபெற்றார். இருவரும் சிறப்பாக விளையாடி வந்தனர். ஆனால் ஆலிம் நூர் மூன்றாவது சுற்றுவரை முன்னிலை வகித்திருந்தார்.
பிறகு கடைசி இரண்டு சுற்றில் சிறப்பாக விளையாடி ஷீத்தல் தேவி 144-142 என்ற செட் கணக்கில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.
நேற்றைய ஆட்ட முடிவில் இந்தியா 82 பதக்கங்கள் வென்று சாதனைப் படைத்துள்ளது. இதற்கு முன்னதாக 72 பதக்கங்கள் வென்றிருந்த நிலையில், தற்போது முதல்முறையா 82 பதக்கங்களை வென்றுள்ளது.