அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணி இடங்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் நவம்பர் 19 – ம் தேதி நடைபெறுகிறது.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 685 ஓட்டுநர் – நடத்துநர் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. இது தொடர்பாக, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் முக்கிய செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் நேரடி நியமனம் மூலம் ஓட்டுநர் – நடத்துநர் பணி தேர்வு செய்யப்பட உள்ளது.
ஓட்டுநர், நடத்துநர்கள் பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு வரும் நவம்பர் 19 ஆம் தேதி, தமிழ்நாடு முழுவதும் 10 மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.
தேர்வுக்கான அனுமதிச் சீட்டை நவம்பர் 13 -ம் தேதி முதல் https://www.arasubus.tn.gov.in/ எனும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கான அனுமதிச் சீட்டு தபாலில் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.