தமிழகத்தில் மொத்தம் 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி .சத்யபிரதா சாஹூ வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 11 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாகவும், அதில் 3 கோடி ஆண் வாக்காளர்களும், 3,11 கோடி பெண் வாக்காளர்களும் உள்ளதாக தெரிவித்தார்.
18 வயது நிரம்பிய முதல் தலைமுறை வாக்காளர்கள் 3.94 லட்சம் பேர் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 6.52 லட்சம் வாக்காளர்கள் கொண்ட சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை தொகுதி அதிக வாக்காளர்கள் கொண்டதாகவும், குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தொகுதி 1.69 லட்சம் வாக்காளர்களுடன் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பொது மக்கள் அனைவரும், தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் செய்ய நேரடியாகவோ அல்லது தேர்தல் கமிஷன் இணையதளம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் எனறும் சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.