ஆம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுக அரசின் அலட்சியம் காரணமாக சின்ன வெங்காயம் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
இதனால், ஒரு கிலோ 200 ரூபாய் வரை விற்பனையானது. இதனால், இல்லத்தரசிகள் வெங்காயத்தை பார்த்தாலே கண்ணீர் வடித்தனர். பெண்களின் கடும் கோபத்தில் இருந்து தப்பிக்க வெளி மாநிலத்திலிருந்து அதிக அளவில் இறக்குமதி செய்து சமாளிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக வெளி மாவட்டத்திலிருந்து சின்ன வெங்காயம் வரத்து குறைந்தது. இதனால், கடந்த சில நாட்களாக மீண்டும் விலை உயர்வைச் சந்தித்து வருகிறது. சின்ன வெங்காயம் 1 கிலோ 100 ரூபாயிக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வால் நடுத்தர மக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக, வியாபாரிகளிடம் விசாரித்தபோது, தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரியில் மட்டுமே சின்ன வெங்காயம் சாகுபடி அதிகம். ஆனால், தரம் குறைவு. இதனால், ஒட்டன்சத்திரம், ஈரோடு, திண்டுக்கல் பகுதி சின்ன வெங்காயத்துக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. இருப்பினும் இங்கு சாகுபடி குறைவாக உள்ளது.
இதேபாலே, வெளி மாநிலங்களிலிருந்து சந்தைக்கு வரத்து குறைந்து போனதால், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு தொடரும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, வெங்காயம் விலை உயர்வில் கோட்டை விட்ட திமுக அரசு, இப்போதாவது விழித்துக் கொண்டு விலை உயர்வை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இல்லத்தரசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.