தமிழக பாஜக இளைஞர் மற்றும் விளையாட்டுப் பிரிவுத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தமிழக முதல்வர் புகைப்படத்தை அகற்றியதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக பாஜக இளைஞர் மற்றும் விளையாட்டுப்பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டியை சென்னை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இல்லம் உள்ள பனையூரில் அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்தது, பொதுச் சொத்துக்களுக்குத் தேசம் விளைவித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஏற்கனவே, அமர் பிரசாத் ரெட்டி மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில், அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி சுந்தர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது நேரில் ஆஜராக வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளார்.
இதனிடைய, சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அமர் பிரசாத் ரெட்டிக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. அதன்படி, நுங்கம்பாக்கத்தில் போக்குவரத்துக்கு போலீசாரிடம் தகராறு செய்த வழக்கில் அமர் பிரசாத் ரெட்டிக்கு, நவம்பர் 10 -ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டது.
திமுக ஆட்சி அமைந்தது முதல் பாஜக முக்கிய நிர்வாகிகள் மீது தொடர்ந்து வழக்கு போடப்பட்டு வருகிறது. அமர் பிரசாத் ரெட்டி விவகாரத்தில், அவர் ஜாமினில் வெளியே வராத வகையில் பல்வேறு தடுகிடு தத்தங்களை திமுக அரசு செய்து வருகிறது.
இதனிடையே, பாஜக தலைமையால் நியமிக்கப்பட்ட 4 பேர் கொண்ட குழு, அமர்பிரசாத் ரெட்டியிடம் விசாரணை நடத்த உள்ளது. இதில், அமர்பிரசாத் ரெட்டி கொடுக்கும் வாக்குமூலம் தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.