பிராந்திய விமான இணைப்புத் திட்டமான UDAN வெற்றிகரமாக 6 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது. இதன் மூலம் 1.3 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
பிராந்திய இணைப்புத் திட்டம் (RCS) – UDAN (உதே தேஷ் கா ஆம் நாக்ரிக்), இந்தியாவில் விமான பயண உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பை மேம்படுத்துவதற்கான மத்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் கூடிய முன்முயற்சியாகும், குறிப்பாக தொலைதூர மற்றும் பின்தங்கிய பகுதிகளில் சேவை அளிக்கும் இந்தி திட்டம் கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் தேசிய சிவில் விமானப் போக்குவரத்துக் கொள்கையின் (NCAP) 2016 இன் முக்கிய அங்கமாகும்,
முதல் RCS-UDAN விமானத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி தொடங்கி வைத்தார், இது சிம்லாவிலிருந்து டெல்லியை இணைக்கிறது. இந்த திட்டம், நாட்டின் பின்தங்கிய பகுதிகளில் சேவை செய்யப்படாத விமான வழித்தடங்களை மேம்படுத்துவதிலும், சாதாரண குடிமக்களின் ஆசைகளை நிறைவேற்றுவதிலும் கவனம் செலுத்துவதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. அது 130 லட்சத்திற்கும் அதிகமான பயணிகளின் பயணத்தை எளிதாக்கியுள்ளது, விமானப் பயண அணுகலை மேம்படுத்துவதில் அதன் வெற்றியை வெளிப்படுத்துகிறது.
இந்த திட்டம் தொடங்கப்பட்டு 6 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், இதன் பல்வேறு பதிப்புகள் தொடங்கப்பட்டன. அதாவது திட்டம் 1.0 மூலம் 5 விமான நிறுவனங்களுக்கு 70 விமான நிலையங்களுக்கு 128 விமான வழித்தடங்கள் உருவக்கப்பட்டுள்ளன. திட்டம் 2.0 மூலம் முதல் முறையாக, ஹெலிபேடுகள் இணைக்கப்பட்டன.
திட்டம் 3.0 மூலம் சுற்றுலா அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பில், சுற்றுலா வழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. நீர் வானூர்திகளை இணைப்பதற்கான கடல் விமானங்கள் தவிர, வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள பல வழித்தடங்கள் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன.
திட்டம் 4.0 மூலம் வடகிழக்கு பகுதிகள், மலைப்பாங்கான மாநிலங்கள் மற்றும் தீவுகளுக்கு உத்வேகம் அளித்தது. ஹெலிகாப்டர்கள் மற்றும் கடல் விமானங்களின் இயக்கம் இணைக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 6 ஆண்டுகளில் நான்கு புதிய மற்றும் வெற்றிகரமான விமான நிறுவனங்கள் வந்துள்ளதால், சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சிக்கு RCS-UDAN பங்களிக்கிறது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் விமான நிறுவனங்களைத் தொடங்குவதற்கும், நிலையான வணிக மாதிரியை உருவாக்குவதற்கும் உதவியது
கூடுதலாக, சிறிய பிராந்திய விமான நிறுவனங்களான ஃப்ளைபிக், ஸ்டார் ஏர் மற்றும் இந்தியாஒன் ஏர் ஆகியவை தங்கள் வணிகங்களை அளவிடுவதற்கு வாய்ப்புகளை வழங்குகிறது மற்றும் அவர்களின் வெற்றிகரமான ஓட்டம், விமான வணிகத்திற்கு உகந்த ஒரு இணக்கமான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குகிறது என்பதற்கு சான்றாகும்.