திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு ஊழல் மலிந்துவிட்டது. பெண்கள், குழந்தைகள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது.
இன்னும் சொல்லப்போனால், தமிழக ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. குறிப்பாக, ஆளுநர் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீழ்ச்சு என்பதை ஏற்க முடியாது. எனவே, ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லாத நிலையை உருவாக்கிய திமுக அரசை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
மேலும், தமிழகத்தில் தேசியத் தலைவர்கள் விடுதலைப் போராட்ட வீரர்கள் குறித்த வரலாற்றை மறைக்க முயற்சி செய்யப்படுகிறது.
இது தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்து மிகவும் சரியானது. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் பாலஸ்தீனம் ஆதரவு என்ற பெயரில் ஹமாஸ் தீவிரவாதிகளின் ஆதரவாளர்களை வெளிப்படையாக பார்க்க முடிகிறது. இது நாட்டுக்கும், வீட்டுக்கும் பெரும் கேடு விளைவிக்கும் என்றார்.