சேலம் மாவட்டம் ஆத்தூர் அம்மம்பாளையத்தில் ஐஜேகே கட்சியின் சார்பில் விழா நடைபெற்றது. இதில், பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் கலந்து கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் பாரிவேந்தர் , நாங்கள் கடந்த 2014 -ம் ஆண்டு முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறோம். தமிழகத்தில், ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்க செயலாகும். மனசாட்சி உள்ள யாரும் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு குறிப்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு மிகவும் சீர் கெட்டு போய் உள்ளது. அமைச்சர் உதயநிதி சனாதனத்தை எதிர்ப்பதாக சொல்லி வருகிறார். ஆனால், அவரது தலைமையில் இயங்கும் இளைஞர் அணி மாநாடு நடத்திய போது கால்கோல் விழாவில் அர்ச்சர்களை வைத்து பூஜை செய்து உள்ளனர்.
இன்னும் சொல்லப்போனால், அமைச்சர் உதயநிதி உட்பட அவரது குடும்பத்தினர் பலர் கிறிஸ்தவ மதத்தில் உள்ளனர். அப்படி இருக்கையில், மதம் மாறிய பின்னர் மற்ற மதத்தை ஒழிப்போம் என்று கூறுவது சரியான கருத்து அல்ல.
எங்களைப் பொறுத்தவரை மோடியே மீண்டும் பிரதமராக வருவார். இது எங்கள் கருத்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டு மக்களின் கருத்தாகும் என்றார்.