உத்திரப் பிரதேசம் மாநிலம், பகவான் ராமர் அவதரித்த அயோத்தியில் பல கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட திருக்கோவில் கட்டப்பட்டு வருகிறது.
இந்த திருக்கோவிலின் கும்பாபிஷேகம் வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 -ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
கும்பாபிஷேக விழாவில் பாரதப் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சாதுக்கள், மடாதிபதிகள், பாஜகவினர், இந்து அமைப்பு நிர்வாகிகள், பொது மக்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
பகவான் ராமர் விழாவை வெகு சிறப்பாக நாடு முழுவதும் கொண்டாட ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் முடிவு செய்துள்ளன. கும்பாபிஷேக தினம் அன்று நாடு முழுவதும் உள்ள நகரங்கள், கிராமங்கள் என அனைத்து பகுதிகளிலும் பகவான் ராமர் படங்களுடன் ஊர்வலம், பஜனை, சிறப்பு வழிபாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விழாவில் சமுதாய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். ராமர் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி நடைபெறும் திருப்பணிகள் வீடியோ வெளியாகி பக்தர்களிடையே பக்தி பரவசம் அடைய வைத்துள்ளது.