ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது.
முதல் போட்டி தர்மசாலாவில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாம் போட்டி கொல்கத்தாவில் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நெதர்லாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையே நடைபெறுகிறது.
இந்தத் தொடரில் நெதர்லாந்து அணி விளையாடிய 5 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வேற்று பெற்று 4 போட்டிகளில் தோல்வியடைந்து உள்ளது.
இதே போல் வங்கதேச அணியும் விளையாடிய 5 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிப் பெற்று 4 போட்டியில் தோல்வியடைந்துள்ளது.
நெதர்லாந்து அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் 2 புள்ளிகள் மற்றும் -1.9 நெட் ரன் ரேட் உடன் உள்ளது. அதேபோல் வங்கதேசம் அணியும் 2 புள்ளிகள் மற்றும் -1.2 நெட் ரன் ரேட் உடன் 8 வது இடத்தில உள்ளது.
வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து இரு அணிகளும் கடைசியாக விளையாடிய போட்டியில் தோல்வியை அடைந்துள்ளது.
மேலும் இந்த ஆட்டத்தில் தோல்வி அடையும் அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்துவிடும் என்பதால் வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
வெற்றி வாய்ப்பு கணக்கெடுப்பில் வங்கதேச அணி 71% வெற்றி பெரும் என்றும் நெதர்லாந்து அணி 29% வெற்றி பெரும் என்றும் இணையத்தில் பதிவிட்டுள்ளது.