இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 388 ரன்களை எடுத்துள்ளது.
ஒரு நாள் உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லதாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது.
ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இதில் டேவிட் வார்னர் 6 சிக்சர்கள் மற்றும் 5 பௌண்டரீஸ் என அடித்து நியூசிலாந்து பந்துவீச்சாளர்களின் பந்தை பறக்கவிட்ட டேவிட் வார்னர் 65 பந்துகளில் 81 ரன்களை அடித்து க்ளென் பந்தில் ஆட்டமிழந்தார்.
டிராவிஸ் ஹெட் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 10 பௌண்டரீஸ் மற்றும் 7 சிக்சர்கள் என அடித்து 67 பந்தில் 109 ரன்களுடன் க்ளென் பந்தில் ஆட்டமிழந்தார்.
இவர்களைத் தொடர்ந்து மிட்செல் மார்ஷ் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாக தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இதில் மிட்செல் மார்ஷ் 36 ரன்களிலும் ஸ்டீவ் ஸ்மித் 18 ரங்களிலும் ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து களமிறங்கிய மார்ன்ஸ் 18 ரன்களில் ஆட்டமிழக்க அப்போது ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோர் 274/5 ஆகா இருந்தது.
இதைத் தொடர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்த கிளென் மேக்ஸ்வெல் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் களமிறங்கினர். இதில் கிளென் மேக்ஸ்வெல் 5 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 24 பந்துகளில் 41 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.
பின்னர் விளையாடி வந்த ஜோஷ் 4 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என மொத்தமாக 28 பந்துகளில் 38 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் 4 சிக்சர்கள் மற்றும் 2 பௌண்டரீஸ் என 14 பந்துகளில் 37 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.
இதனால் 49.2 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 388 ரன்களை எடுத்துள்ளது.
நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டிரெண்ட் போல்ட் மற்றும் க்ளென் பிலிப்ஸ் தலா 3 விக்கெட்களும் மிட்செல் சான்ட்னர் 2 விக்கெட்களும் ஜேம்ஸ் நீஷம் மற்றும் மாட் ஹென்றி தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனால் நியூசிலாந்து அணி வெற்றிப் பெற 389 ரன்கள் இலக்காக உள்ளது.