மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரில் தாய்லாந்து அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி !
மகளிருக்கான 7 வது ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கிப் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. மகளிா் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியை இந்தியா நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
இந்தப் போட்டியில் இந்தியா தவிா்த்து, சீனா, நடப்பு சாம்பியன் ஜப்பான், தென் கொரியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. முதலில் ரவுண்ட் ராபின் முறையில் ஆட்டங்கள் நடைபெற்று, முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இதில் முதல் போட்டி இந்தியா மற்றும் தாய்லாந்து அணிகளுக்கிடையே நடைபெற்றது. இதில் இந்திய பெண்கள் தங்களது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினர்.
இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் மோனிகா 7 வது நிமிடத்திலும், சலிமா டெடெ 15 வது நிமிடத்திலும், சங்கீதா குமாரி 29, 45 வது நிமிடத்திலும், தீபிகா 40 வது நிமிடத்திலும், லால்ரெம்சியாமி 52 வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
மேலும் தாய்லாந்துக்காக சுபான்சா சமான்சோ 22 வது நிமிடத்தில் கோலடித்தாா். தாய்லாந்தில் மற்ற வீராங்கனைகள் எவ்வளவு முயற்சி செய்தும் கோல் அடிக்க முடியாமல் போனது.
இதனால் ஆட்டமுடிவில் இந்தியா 7-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.