சென்னை அம்பத்தூர் அடுத்துள்ள பட்டரவாக்கத்தில் உள்ள தொழிற்சாலைகளில் திரம்பிய திசை எல்லாம் வடமாநில தொழிலாளர்கள்தான். கடந்த 23 -ம் தேதி கோலாகலமாக கொண்டாப்பட்ட ஆயுத பூஜையின் இரவில், மது கொண்டாட்டம்நடைபெற்றுள்ளது. இதில், இரு குழுக்களுக்கு இடையே முன்பகை காரணமாக மோதல் ஏற்பட்டுள்ளது. சமாதானம் செய்ய சென்ற தொழிற்சாலை நிர்வாகிகள் மீதும் தாக்குதலுக்கு முயற்சிக்க, தப்பித்தால் போதும் என எஸ்கேப்பாகி போலீஸூக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அப்படியா சங்கதி என, சம்பவ இடத்திற்கு வந்த அப்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் ரகுபதி, ராஜ்குமார் தொழிலாளர்களை சமாதானம் செய்ய முயன்றுள்ளனர். ஆனால் வடமாநில தொழிலாளர்கள் குடிபோதையில் இருந்ததால், தடி, கம்புகளுடன் போலீசாரை மிரட்டியதோடு தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வைரலானது.
நிலமை கைமீறி போவதை லேட்டாக உணர்ந்த போலீசார், கூடுதல் போலீசாரை இறக்கி அமைதியை கொண்டு வந்துள்ளனர். மேலும், அங்குள்ள சிசிடிவி கேமராவை கைப்பற்றிய போலீசார், 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, 5 பேரை கைது செய்தனர். தற்போது, 28 இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்களையும் தட்டி தூக்கியுள்ளனர். மேலும் சிலரையும் தேடி வருகின்றனர். கைது எண்ணிகை 100 தாண்டும் என்கின்றனர்.
வடமாநில விவகாரத்தில் காவல்துறை ஆரம்பத்தில் இருந்தே அலட்சியமாக உள்ளது. இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலை முன்பே கூட்டியே கண்டுபிடித்து, தெரிவித்திருந்தால், இந்து போன்ற சம்பவங்கள் ஏற்பட்டு இருக்காது. இது உளவுத்துறையின் தோல்வியையே காட்டுகிறது என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.