ஹோட்டலுக்கு சென்றால் சுவையான உணவு மட்டும்தான் கிடைக்கும் என்பது அந்தக் காலம். தற்போது, ஹோட்டல் ஒன்று சுற்றி வந்து கொண்டே சாப்பிட வருபவர்களுக்கு சர்ப்ரைஸ் ஹாப்பி கொடுக்கிறது என்றால் சும்மாவா…!
இந்த ஹோட்டல் எங்கு உள்ளது தெரியுமா? நம் பாரதத்தில் சாட்சாத் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில்தான். அகமதாபாத்தின் புகழ்பெற்ற ஹோட்டல்களில் முதலிடம் வகிப்பது இந்த பதாங் ஹோட்டல்தான். இந்த ஹோட்டலுக்கு ஒரு வரலாறு உண்டு. அது என்னவென்றால், இங்கிலாந்தில் இந்தியா உலகக் கோப்பை வெற்றியுடன் இணைந்து கட்டப்பட்டு திறக்கப்பட்டது.
கடந்த நான்கு ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு தற்போது இந்த ஹோட்டல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது, உலகம் முழுவதும் இந்த ஹோட்டல் குறித்த டாக் வைரலாகி வருகிறது.
சபர்மதி ஆற்றங்கரைக்கு அருகில் அழகிய தோற்றத்துடன் பார்ப்பவர்களை மிரள வைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 221 அடி உயரமும், 110 இருக்கைகளும் கொண்ட இந்த உணவகத்தில் 21 தளங்கள உள்ளன. அதுமட்டுமல்ல, 90 நிமிடங்களுக்கு ஒரு முறை சுற்றி வந்து 360 டிகிரி காட்சியில் அகமதாபாத் நகரின் அழகை சாப்பிட செல்பவர்களின் கண்களுக்கு விருந்து படைக்கிறது. இதனால், ஹோட்டலை சாப்பிட செல்லும் கும்பலைவிட பார்வையிடச் செல்லும் கும்பலே அதிகமாகிவிட்டதாம்.