இன்றைய நவீன யுகத்தில் கடன் இல்லாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, பலரும் தங்களது தலையில் கடன் சுமையை வைத்துள்ளனர். காரணம், குழந்தைகள் படிப்பு, வீடு கட்டுதல், செல் போன் வாங்குதல், பைக், கார் வாங்குதல், துணி எடுத்தல் என லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.
சிலர் கடனுக்கு வட்டி கட்டியே ஏழை ஆனவர்களும் உண்டு. கடன் வலையில் சிக்கியவர்கள் எப்படியாவது கடனை அடைத்துவிடலாம் எனக் கணக்குப் போட்டால், அடுத்த செலவு ரெடியாக துரத்தும்.
கிராமங்களில் வாழ்பவர்களைவிட நகரங்களில் வாழ்பவர்கள்தான் இந்த கடன் தொல்லையில் அதிகமாகச் சிக்கியுள்ளனர். இவர்கள் எல்லாம் காலையில் எழுந்தவுடன் கேட்கும் ஒரே கேள்வி, கடவுளே இந்த கடனை எப்ப அடைப்பேன் என்றுதான்.
அதற்குத் தீர்வு சொல்கிறது இந்த கட்டுரை. உங்கள் பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை சென்று கந்த சஷ்டி கவசம் மனதுக்குள் பாராயணம் செய்ய வேண்டும். ஒரு முறை அல்ல. மொத்தம் 36 முறை.
கோவிக்குச் செல்ல முடியாதவர்கள், செவ்வாய்க்கிழமைகளில் தங்களது வீட்டின் பூஜை அறையில் உள்ள முருகர் படத்தின் முன்பு வடக்கு நோக்கி அமர்ந்து தீபமேற்றி 36 முறை கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும்.
இப்படி ஒரே ஒரு செவ்வாய்க்கிழமை செய்து, அதில் கிடைக்கும் ரிசல்ட்டை நண்பர்களுக்கும் சொல்லுங்கள். தொடர்ந்து படிங்க… கடனை ஓடஓட விரட்டுங்க.