உலகக்கோப்பை கிரிக்கெட் : நெதர்லாந்து அபார வெற்றி !
Jan 14, 2026, 01:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகக்கோப்பை கிரிக்கெட் : நெதர்லாந்து அபார வெற்றி !

Murugesan M by Murugesan M
Oct 29, 2023, 01:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்றையப் போட்டியில் நெதர்லாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்றையப் போட்டி கொல்கத்தாவில் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நெதர்லாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையே நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் பேட்டிங் தேர்வுச் செய்தார். அதன்படி நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக விக்ரம்ஜித் சிங் மற்றும் மேக்ஸ் ஓ’டவுட் களமிறங்கினர்.

இதில் விக்ரம்ஜித் சிங் 2 வது ஓவரில் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்பு அடுத்த ஓவரிலேயே மேக்ஸ் ஓ’டவுட் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

இவர்களை தொடர்ந்து வெஸ்லி பாரேசி மற்றும் கொலின் அக்கர்மேன் களமிறங்கினர். இருவரின் கூட்டணி சற்று சிறப்பாக விளையாடி வந்தது. இருப்பினும் வங்கதேசத்தின் பந்தை சரியாக அடிக்க முடியாமல் நிதானமாக விளையாடி வந்தனர்.

13 ஓவர்கள் வரை விக்கெட் ஏதும் இழக்காமல் நிதானமாக விளையாடி வந்த கூட்டணி 14 வது ஓவரில் பிரிந்தது. வெஸ்லி பாரேசி 8 பௌண்டரீஸ் அடித்து மொத்தமாக 41 பந்துகளுக்கு 41 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.

அவருடன் இணைந்து சிறப்பாக விளையாடி வந்த கொலின் அக்கர்மேன் அடுத்த ஓவரிலேயே 33 பந்துகளுக்கு 15 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.

இவர்களைத் தொடர்ந்து நெதர்லாந்து அணியின் தலைவர் ஸ்காட் எட்வர்ட்ஸ் களமிறங்கினார். சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்திய ஸ்காட் 89 பந்துகளில் 68 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.

இவரை தொடர்ந்து களமிறங்கிய பாஸ் டி லீடே 17 ரன்களிலும், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் 35 ரன்களிலும் ஆட்டமிழக்க லோகன் வான் பீக் 23 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனால் 50 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 229 ரன்கள் எடுத்துள்ளது.

வங்கதேச அணியில் அதிகபட்சமாக ஷோரிஃபுல் இஸ்லாம், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான் மற்றும் மகேதி ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். ஷகிப் அல் ஹசன் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் லிட்டான் தாஸ் மற்றும் தனஜித் ஹாசன் களமிறங்கினர்.

இதில் லிட்டான் தாஸ் 4 வது ஓவரில் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து அடுத்த ஓவரிலேயே தனஜித் ஹாசன் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து களமிறங்கிய மெஹிதி ஹாசன் நிதானமாக விளையாடி 5 பௌண்டரீஸ் மற்றும் ஒரு சிக்சர் அடித்து 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரங்களுக்கு ஆட்டமிழக்க முஸ்தாபிசுர் ரஹ்மான் மற்றும் மஹ்முதுல்லாஹ் தலா 20 ரன்களும் மகேதி ஹசன் 17 ரங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் 42 வது ஓவரில் வங்கதேசம் நை அனைத்து விக்கெட்களையும் இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது.

நெதர்லாந்து அணியில் அதிகபட்சமாக பால் வான் மீகெரென் 4 விக்கெட்களும் பாஸ் டி லீடே 2 விக்கெட்களும் கொலின் அக்கர்மேன், லோகன் வான் பீக், ஆர்யன் தத் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனால் நெதர்லாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Tags: ICC World CupNetherlands vs Bangladesh
ShareTweetSendShare
Previous Post

இதுவே இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் !

Next Post

இனி முப்படைத் தாக்குதல்: இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு!

Related News

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies