பொதுமக்கள் களத்தில் இறங்கி சாலை பணிகளை மேற்கொண்டு பணிகளை முடித்தனர்.
கன்யாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் பாகோடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட 9-வது வார்டில் குழிச்சாணி முதல் இடையாணத்து வரை செல்லும் சாலை பல ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் குண்டும் குழியுமாக காணப்பட்டது.
இந்நிலையில் இந்த ஊரில் சுமார் 75 ஆண்டு பழமை வாய்ந்த கிருஷ்ணன் ஆலயம் ஒன்று உள்ளது. தற்போது பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று பேராட்சி சார்பில் இன்டர்லாக் பதிக்கும் பணியானது நடைபெற்று வருகிறது.
அதனை அந்த பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் ஸ்ரீ குமார் சாலையை உயர்ந்த கூடாது என்று கூறி வேலையை தடுத்து நிறுத்தி ரகளையில் ஈடுபட்டார்.
இதையடுத்து பல மணி நேரமாக வேலை தடைபட்டது. பிறகு ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து களத்தில் இறங்கி இன்டர்லாக் பதிக்கும் பணியை அவர்களேத் தொடர்ந்து பணிகளை செய்து முடித்தனர் இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வரைலாகி வருகிறது