பக்கவாதம் ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றிய விழிப்புணர்வை அனைவரும் பெற வேண்டும் என நோக்கத்தோடு ஆண்டுதோறும் அக்டோபர் 29-ஆம் தேதி ‘ உலக பக்கவாத தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.
பக்கவாதம் ஆபத்தானது என்று சொல்வதற்கு முக்கிய காரணம் – இதற்கு இதுதான் அறிகுறி என்று குறிப்பிட்டு சொல்லிவிட முடியாது. ஆனால், உடனடி அறிகுறிகளை கவனித்து மருத்துவரை அணுகுவது நல்லது.
தலைவலி, பார்வை மங்குதல், திடீர் மயக்கம், கை, கால்களில் தளர்ச்சி, உணர்ச்சிக் குறைவு, மரத்துப் போதல், போன்றவை இதன் உடனடி அறிகுறிகள் ஆகும்.
வயதுவரம்பின்றி இந்த நோய்மை ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இதன் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
உடல் எடையை சீராக பராமரிப்பது, மன அழுத்தம் ஏற்படாமல் இருப்பது, உடலையும், மனதையும் ஆரோக்கியமான வைத்து கொள்வது உள்ளிட்டவற்றை வலியுறுத்தியும், பக்கவாதம் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் அக்டோபர் -29ம் தேதி ‘உலக பக்கவாத தினம்’ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஆண்டுக்கு ஆண்டு பக்கவாத நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதை தடுப்பதற்கு மக்களிடம் போதிய அளவு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.