இரண்டாம் நாள் போட்டியிலும் இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை பதிவு செய்துள்ளது.
மகளிருக்கான 7 வது ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கிப் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்தியா தவிா்த்து, சீனா, நடப்பு சாம்பியன் ஜப்பான், தென் கொரியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.
இதில் நேற்றையப் போட்டிகள் ஜார்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் இந்தியா மற்றும் மலேசியா அணிகள் விளையாடியப் போட்டியில் இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றுள்ளது.
இதில் இந்திய அணியின் வந்தனா 7 மற்றும் 21 வது நிமிடங்களில் கோல் அடித்தார். மேலும் சங்கீதா குமாரி 28 வது நிமிடத்திலும், லால்ரெம்சியாமி 28 வது நிமிடத்திலும், பூஜா 38 வது நிமிடத்திலும் கோல் அடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.
மலேசியா அணியின் வீரர்கனைகள் எவ்வளவு முயற்சி செய்தும் கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை. ஆகையால் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
மேலும் இந்தத் தொடரில் விளையாடிய இரண்டுப் போட்டிகளிலும் இந்தியா அபாரமாக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.