சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பல்வேறு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் சராசரியாக ஆயிரக்கணக்கானோர் மெட்ரோ ரயிலை பயன்படுத்தி வருகின்றனர்.
மெட்ரோ ரயிலில் பயணிக்க வேண்டும் எனில் ரயில் நிலையங்களுக்கு நேரில் சென்று பொதுமக்கள் டிக்கெட் எடுத்துகொள்ளலாம். மேலும் QR குறியீடு, பயண அட்டை போன்ற நடைமுறைகளில் டிக்கெட் எடுத்து கொள்ளலாம். இந்த நிலையில் வாட்ஸ் ஆப் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதியை மெட்ரோ நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.
இதற்கு 91 83000 86000 என்ற எண்ணிற்கு வாட்ஸப்பில் ஹாய் என்று அனுப்ப வேண்டும். அப்போது மெட்ரோ நிலையத்திலிருந்து ஒரு சில ஆப்ஷன்கள் கொடுக்கப்படும். அதில் ‘புக் யுவர் டிக்கெட்’ என்ற ஆப்ஷன்னை தொட வேண்டும்.
பிறகு எந்த ரயில் நிலையத்தில் இருந்து புறப்படபோகிறோம், என்று கேட்கும் அதனை சரியாக தேர்வு செய்த பிறகு எங்கே இறங்க போகிறோம் என்று கேட்கப்படும் அதனையும் சரியாக தேர்வு செய்த பிறகு எத்தனை பயணசீட்டு வேண்டும் என்று கேட்கபடும், அந்த அம்சத்தில் ஒரு முறைக்கு அதிகபட்சமாக 6 பயணசீட்டு வரை கொடுக்கப்பட்டுள்ளது, அதனை தேர்வு செய்த பின்னர் நாம் தேர்வு செய்த அனைத்தையும் சரிபார்க்க வேண்டும் அந்த சமயத்தில் இந்த பயண சீட்டை கேன்சல் செய்யவேண்டும் என்றாலும் செய்துக் கொள்ளலாம்.
பிறகு UPI மூலமாகவோ அல்லது கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பாங்கிங் மூலமாக பணம் கொடுத்து பயன்சீட்டை பெற்றுக் கொல்லலாம்.