இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தில் பஞ்சாபை வீழ்த்தி சென்னை 5-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியன் சூப்பர் லீக் ( ஐஎல்எஸ் ) கால்பந்து இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியானது சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியின் ஆரம்பத்திலிருந்தே சென்னை அணியின் வீர்ரகள் அணி ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.
சென்னை அணியில் எட்வர்ட்ஸ் 24 வது நிமிடத்திலும், ஷீல்ட்ஸ் 27 வது நிமிடத்திலும் , க்ரிவெல்லரோ 46 வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இதனால் இடைவேளையின்போது சென்னை அணி 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
பின்னர் இரண்டாவது பாதியில் சென்னை அணியின் வின்சி 84 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். பஞ்சாப் அணியின் வீரர் கிருஷ்ணானந்த சிங் 86 வது நிமிடத்தில் ஒரு கோலை அடித்தார்.
இதனால் சென்னை அணி 5-1 என்ற கணக்கில் அபார வெற்றிப் பெற்றது. இதனால் புள்ளி பட்டியில் சென்னை அணி 6 வது இடத்தில் உள்ளது.