ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றையப் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடவுள்ளது.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட்ட தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டி புனேவில் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானதில் நடைபெறுகிறது.
இதில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாகின்றன. இந்த உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணி விளையாடிய 5 போட்டிகளில் மூன்றில் தோல்வியடைந்து, இரண்டில் வெற்றி பெற்றும் 4 புள்ளிகளுடன் 5 ஆம் இடத்தில் உள்ளது.
அதேப்போல் ஆப்கானிஸ்தான் அணி விளையாடி 5 போட்டிகளில் மூன்றில் தோல்வியடைந்து, இரண்டில் வெற்றி பெற்றும் 4 புள்ளிகளுடன் 7 ஆம் இடத்தில் உள்ளது.
இந்த மைதானம் அதிக ஸ்கோர் எடுக்கும் மைதானமாகவே உள்ளது. இங்கு எப்போது பேட்ஸ்மேன்களின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும். வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கு விக்கெட்டுகளை வீழ்த்துவதில் முன்னோக்கி இருந்திருக்கலாம் ஆனால் இன்று ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் ஒரு நாள் போட்டிகளில் 11 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இலங்கை அணி 7 போட்டிகளிலும், ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகளிலும் வெற்றிப் பெற்றுள்ளது. மேலும் ரூ போட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை.
மேலும் வெற்றி வாய்ப்பு கணக்கெடுப்பில் இலங்கை அணி 61% வெற்றி பெரும் என்றும் ஆப்கானிஸ்தான் அணி 39% வெற்றி பெரும் என்றும் இணையத்தில் பதிவிட்டுள்ளது.