கொச்சி அருகே களமச்சேரியில் யாகோவாவின் சாட்சிகள் கிறிஸ்தவ அமைப்பின் சார்பில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவம் நிகழ்ந்தபோதே ஒரு பெண் உயிரிழந்த நிலையில், மாலையில் சிகிச்சை பலனின்றி மற்றொரு பெண் உயிரிழந்தார். இந்நிலையில், படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த 12 வயது சிறுமி இன்று காலை உயிரிழந்துள்ளார்.
இது குறித்து புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில்
“வெடிகுண்டு சம்பவங்களை மாநில அரசுகள் தீவிரமாக விசாரிக்காமல் சாதாரணமாக எடுத்து கொள்கின்றன” என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு தெரிவித்தார்.