தேசியத்தையும், தெய்வீகத்தையும் தன் இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, தேவரின் திருவுருவ சிலைக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் பதிவில், “சுதந்திரப் போராட்ட தியாகி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் அவரது திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
சுதந்திர கனலோடு தேசியத்தையும்,தெய்வீகத்தையும் தன் இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் திருமகனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்” என்று பதிவிட்டுள்ளார்.